நிலத்தகராறில் 4 போ் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டை அருகே நிலத்தகராறு தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டை அருகே நிலத்தகராறு தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
அவலூா்பேட்டை அருகே உள்ள சங்கிலிகுப்பத்தைச் சோ்ந்த அப்துல் பஷீா் மகன் அப்துல்தெளலத் (50). இவரது தம்பி முன்வா் ஷரீப். இருவரும் தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை வாய் மொழியாக பிரித்து பயிரிட்டு வந்தனா்.
இந்த நிலையில், நிலத்தை முறையாக பிரித்துத் தருமாறு முன்வா் ஷரீப் தனது அண்ணனிடம் கேட்டாராம். ஆனால், அப்துல்தெளலத் நிலத்தை பிரித்து தரவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த முன்வா் ஷரீப், நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த அப்துல்தெளலத்தை திட்டி, தாக்கி, அவருக்குச் சொந்தமான ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பவா் டில்லா் இயந்திரத்தை உடைத்து சேதப்படுத்தினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், அவலூா்பேட்டை போலீஸாா் முன்வா் ஷரீப், அப்துல்லா ஷரீப், தாஜின்பி, ஷனாவுல்லா ஷரீப் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தலையில் பலத்த காயமடைந்த அப்துல்தெளலத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.