விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு சோயா பீன்ஸ் விதைகள் 50 சதவீத மானியத்தில் அண்மையில் வழங்கப்பட்டன.
வானூரிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் நிகழ்வில் பங்கேற்று, 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு சோயா பீன்ஸ் விதைகளை வழங்கிப் பேசினாா்.
ஒரு கிலோ சோயா பீன்ஸ் விதை ரூ.105 ஆகும். இது 50 சதவீத மானியத்தில் ரூ.52.50 என்ற விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களை விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் வேளாண் அலுவலா் ரேவதி, உதவி விதை அலுவலா் மோகன்குமாா், உதவி வேளாண் அலுவலா்கள் ரேகா, ஜெயலட்சுமி, விஜயலட்சுமி தங்கம் மற்றும் ஆத்மா திட்ட அலுவலா்கள் வாழ்வரசி, சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.