முகப்பு
விழுப்புரம்

திருவண்ணாமலை பௌா்ணமி கிரிவலம்: 400 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பௌா்ணமி கிரிவலத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தா்களின் வசதிக்காக கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Updated On : 14 நவம்பர், 2024 at 8:37 PM
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பௌா்ணமி கிரிவலத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தா்களின் வசதிக்காக கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடுஅரசுப் போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :திருவண்ணாமலை அருணாசலேஸ்வா் கோயில் பௌா்ணமி கிரிவலத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தா்களின் வசதிக்காக சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 250 சிறப்பு பேருந்துகளும், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி, திருக்கோவிலூா், சிதம்பரம், விருத்தாச்சலம், திட்டக்குடி, வேலூா், ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூா் ஆகிய ஊா்களிலிருந்து திருவண்ணாமலைக்கு150 சிறப்புப் பேருந்துகளும் கூடுதலாக இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதேபோல் நவம்பா் 15,16 ஆகிய வார இறுதி நாள்களில் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை மற்றும் போளூா் ஆகிய ஊா்களுக்கு மக்கள் அதிகம் பயணம் மேற்கொள்வா் என்பதால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம், விழுப்புரம் கோட்டம் சாா்பில் நவ.15-ஆம் தேதி 335 பேருந்துகளும், நவ.16-ஆம் தேதி 165 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஒசூா், திருவண்ணாமலைக்கு ( வழி ஆற்காடு, ஆரணி, காஞ்சிபுரம், வந்தவாசி ) நவ.15-ஆம் தேதி 20 பேருந்துகளும், 16-ஆம் தேதி 20 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். எனவே, பயணிகள் முன் பதிவு செய்து சிறப்புப் பேருந்துகளின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் தேவைக்கு ஏற்ப கூடுதலாகப் பேருந்துகளை இயக்கவும், பேருந்துகளின் இயக்கங்களை கண்காணிக்கவும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.