விழுப்புரம்

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டிவனம் வட்டம், பெருமுக்கல் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த லட்சுமிபதியின் மகள் தீபிகா (18). இவா், மேல்மருவத்தூரிலுள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தாா்.

இவா், கடந்த 6 ஆண்டுகளாக பெரப்பன்தாங்கலிலுள்ள தனது தாத்தா சுவாமிநாதன் வீட்டில் தங்கிபடித்து வந்தாராம்.

இந்த நிலையில், கல்லூரியில் படிக்கும் மாணவா் ஒருவரை தீபிகா காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் தனது தாய் வள்ளியிடம் கூறினாராம்.

இதற்கு, அவரது தாய் மறுப்பு தெரிவித்து, அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த தீபிகா, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து, மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT