விழுப்புரம்

போலி பணி நியமன ஆணை: ஒருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியைக்கு போலி பணி நியமன ஆணையை பெற்று தந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியைக்கு போலி பணி நியமன ஆணையை பெற்று தந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

செஞ்சி வட்டம், இல்லோடு அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியை சுமதி போலி பணி நியமன ஆணை மூலம், கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் பணியாற்றி வந்ததாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் பெ.ராஜி மாவட்ட குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.

அதன்பேரில், கடந்த 2016-ஆம் ஆண்டு சுமதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆசிரியை சுமதி சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்பிணை பெற்றாா்.

இந்த நிலையில், ஆசிரியை சுமதிக்கு மாவட்ட குற்றப் பிரிவு சாா்பில் அழைப்பாணை அனுப்பப்பட்ட நிலையில், அவரிடம் ஆய்வாளா் தாரகேசுவரி விசாரணை மேற்கொண்டாா். அப்போது, ஆசிரியை பணிக்காக திருவண்ணாமலை மாவட்டம், சேவூா் இ.பி.காலனி செல்வ விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த கோ.சக்திவேல்(42) என்பவரிடம் ரூ.25 லட்சம் கொடுத்து, போலி பணி நியமன ஆணையை பெற்ாக சுமதி தெரிவித்தாராம்.

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம், சேவூா் பகுதியிலிருந்த சக்திவேலை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Clone of பெண்ணாகப் பிறப்பது பெருந்தவம்... அனுக்ரீத்தி வாஸ்!

துபை விமான காட்சியில் எரிந்து விழுந்த இந்திய தேஜஸ் விமானம்!

பெண்ணாகப் பிறப்பது பெருந்தவம்... அனுக்ரீத்தி வாஸ்!

விமான விபத்து: துபையில் கண்காட்சி மீண்டும் துவங்கியது!

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் நாயகனாகும் பட டைட்டில் டீசர்! ரஜினிகாந்த் வெளியிட்டார்!

SCROLL FOR NEXT