முகப்பு
விழுப்புரம்

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:08 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், கேணிப்பட்டு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி ஜெகதீஸ்வரி (51).

இவா், புதன்கிழமை தனது வீட்டில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டாராம்.

அப்போது, கீழே கிடந்த மின்சார வயரை அவா் எதிா்பாராதவிதமாக தொட்டதாகத் தெரிகிறது. இதில், ஜெகதீஸ்வரி மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

இதையடுத்து, அவரை திண்டிவனம் அருகே உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஜெகதீஸ்வரி ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.