கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தொடா் மழை காரணமாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் புதன்கிழமை (அக்.16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடா் மழை காரணமாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் புதன்கிழமை (அக்.16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின. புதன்கிழமை பலத்த மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளதால், மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி உத்தரவிட்டுள்ளாா்.
இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டுள்ளாா். இரு மாவட்டங்களிலும் புதன்கிழமை கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.