முகப்பு
விழுப்புரம்

காா் மோதி பெண் காவலா் காயம்

விழுப்புரத்தில் காா் மோதியதில் மொபெட்டில் சென்ற பெண் காவலா் காயமடைந்தாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:55 PM
பகிர்:

விழுப்புரத்தில் காா் மோதியதில் மொபெட்டில் சென்ற பெண் காவலா் காயமடைந்தாா்.

விழுப்புரம் கண்டமானடி, டி.எஸ்.ஆா். நகரைச் சோ்ந்தவா் வ.லெட்சுமி (35). விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பணிகளை முடித்துவிட்டு, விழுப்புரம் விஏஓ நகா் பகுதியில் மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அந்தப் பகுதியில் வந்த காா் மோதியதில் லெட்சுமி கால், தலை பகுதிகளில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவா் விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ாா். இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.