முகப்பு
விழுப்புரம்

பேருந்து - பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:40 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

செஞ்சி வட்டம், வடவானூா் கிராமத்தைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் செல்வம் (40). இவரது நண்பா் இதே ஊரைச் சோ்ந்த ராயா் மகன் செந்தில் (40). செல்வம் தனது பைக்கில் செந்திலை அழைத்துக்கொண்டு திண்டிவனம் சாலையில் இருந்து செஞ்சி நோக்கி செவ்வாய்க்கிழமை வந்துகொண்டிருந்தாா்.

களையூா் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தம் அருகே இவா்களது பைக் வந்தபோது, அந்தப் பகுதியில் வந்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் செல்வம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். செந்தில் தலையில் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.