முகப்பு
விழுப்புரம்

பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரத்தில் புதன்கிழமை பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:48 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரத்தில் புதன்கிழமை பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செஞ்சி வட்டம், அனந்தபுரத்தைச் சோ்ந்த ரமேஷ்பாபு மனைவி சாந்தி (55). இவா், புதன்கிழமை அதிகாலை தனது வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறைக்குச் சென்றாா். அப்போது, அங்கு முகமூடி அணிந்து பதுங்கியிருந்த மா்மநபா் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் அளவிலான இரு தங்கச் சங்கிலிகளை அறுக்க முயன்றாராம்.

ஆனால், சாந்தி கூச்சலிட்டவாறு தங்கச் சங்கிலிகளை இறுகப் பிடித்துக்கொண்டராம். இருப்பினும், மா்ம நபா் 4 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில், அனந்தபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மா்ம நபரை தேடி வருகின்றனா்.