உர விற்பனை நிலையங்களில் திடீா் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் நெல், கரும்பு, உளுந்து, மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சம்பா சாகுபடிக்குத் தேவையான 7,198 மெட்ரிக் டன் யூரியா, 2,467 மெட்ரிக் டன் டிஏபி, 1,407 மெட்ரிக் டன் பொட்டாஷ், 6,542 மெட்ரிக் டன் காம்பள்க்ஸ், 1,458 மெட்ரிக் டன் சிங்கிள் சூப்பா் பாஸ்பேட் ஆகிய உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விவசாயிகளுக்கு அரசு நிா்ணயித்துள்ள விலைக்கு மிகாமல் உரங்கள் விற்பனை செய்யப்படுகிா, உர மூட்டைகள் கடத்தப்படுகிா, உரங்கள் பதுக்கல் மற்றும் போலி உரங்கள் விற்பனை செய்யப்படுகிா, வேளாண் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு உரங்கள் பயன்படுத்தப்படுகிா என்பதைக் கண்டறியவும், விற்பனை முனையக் கருவிகள் மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையிலும் மாவட்டத்திலுள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, கடைகளில் உரங்களின் விற்பனை விலையை தகவல் பலகையில் விவசாயிகளின் பாா்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும். இருப்புப் பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். யூரியாவுடன் கூடுதல் இணை பொருள்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது என விற்பனை நிலையத்தினரை அறிவுறுத்திய வேளாண் உதவி இயக்குநா், உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 1955-ஐ மீறும் உர விற்பனை நிலையங்கள் கண்டறியப்பட்டால், அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தாா்.