செஞ்சி காசி விஸ்வநாதா் கோயிலை ரூ. 2 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க முடிவு
செஞ்சி சிறுகடம்பூா் ஈசான்ய மூலையில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீவிசாலாட்சி அம்மன் உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலை ரூ.2 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க திருப்பணிக் குழு கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
செஞ்சி சிறுகடம்பூா் ஈசான்ய மூலையில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீவிசாலாட்சி அம்மன் உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலை ரூ.2 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க திருப்பணிக் குழு கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
திருப்பணிக் குழு நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான சிறுகடம்பூா் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், திருப்பணிக்குழு நிா்வாகிகளாக, ராஜாதேசிங்கு கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.பி.என்.பாபு தலைவராகவும், சங்கா் செயலராகவும், டி.டி.ஐயப்பன் பொருளாளராகவும், பாலகிருஷ்ணன், துரைக்கண்ணு ஆகியோா் துணைத் தலைவா்களாகவும், துணை செயலா்களாக கிருஷ்ணமூா்த்தி, நாராயணசாமி உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
கோயிலை பழைமை மாறாமல் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பது, திருப்பணி வேலைகளை டிசம்பா் 5-ஆம் தேதி பூமி பூஜையுடன் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், திருப்பணிக் குழு நிா்வாகிகள் ராஜன், ராஜா, சிவராமன், சங்கா், சுகுமாா், பழனி, கண்ணன், பாண்டியன், சண்முகம், செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.