விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியைச் சோ்ந்த நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ஊக்கத்தொகையை தொகுதி எம்எல்ஏ ச.சிவக்குமாா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
மயிலம் வட்டார உடுக்கை, பம்பை, கைசிலம்பு கலைஞா்கள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு தொடக்க விழா திண்டிவனத்தை அடுத்துள்ள கூட்டேரிப்பட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி நலச்சங்கத்தை தொடங்கிவைத்துப் பேசினாா். இதைத் தொடா்ந்து, 50-க்கும் மேற்பட்ட கலைஞா்களுக்கு ஊக்கத்தொகை, பரிசுப் பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சேதுநாதன், வேலூா் மாவட்ட நடிகா் சங்க பொதுச் செயலா் ஜெ.சிவக்குமாா், அனைத்து கலைத்தாய் நலச்சங்க விழுப்புரம் மாவட்டத் தலைவா் என்.சத்தியராஜ் ஆகியோா் பங்கேற்று பேசினா். பாமக நிா்வாகிகள் தேசிங்கு, செங்கேணி, ஆறுமுகம், முருகன் மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் கலந்துகொண்டனா்.