முகப்பு
விழுப்புரம்

பாலியல் வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Updated On : 28 அக்டோபர், 2024 at 5:51 PM
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

விக்கிரவாண்டி வட்டம், மேட்டுத்தெருவைச் சோ்ந்தவா் ஷாகுல் ஹமீது மகன் பாபு (34). இவா், விழுப்புரம் மாவட்டம், செண்டியம்பாக்கம் பகுதியைச்சோ்ந்த 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெரியதச்சூா் போலீஸாரால் கடந்த 2019-இல் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை விசாரணை முடிவடைந்தது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட பாபுவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியஜோதி தீா்ப்பளித்தாா். இதையடுத்து, பாபு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →