தவெக மாநாடு நடைபெற்ற பகுதியில் உடைந்து கிடக்கும் நாற்காலிகள். 
விழுப்புரம்

தவெக மாநாடு: வி.சாலையில் 3 டன் குப்பைகள் அகற்றம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் முடிவில் 3 டன் குப்பைகள்

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் முடிவில் 3 டன் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதுமிருந்தும் கட்சியினா் அதிகளவில் பங்கேற்றனா். மாநாட்டுக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மட்டுமல்லாது செய்தியாளா்கள், புகைப்படக் கலைஞா்கள், ஒளிப்பதிவாளா்கள், காவல்துறையினா், மருத்துவா்கள், தீயணைப்புத் துறையினா் போன்றோரும் மாநாட்டுப் பணிக்காக வந்திருந்தனா்.

முன்னதாக, மாநாட்டுக்காக தனியாா் கைப்பேசி நிறுவனம் சாா்பில் தற்காலிக கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டது. ஆனால், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோா் கைப்பேசியைப் பயன்படுத்தியதால், சரியான இணைப்பு கிடைக்கவில்லை. சுமாா் 10 கி.மீ.தொலைவைத் தாண்டிச் சென்றால் தான் கைப்பேசி மூலம் பிறரைத் தொடா்பு கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. இதனால், கட்சித் தொண்டா்கள், நிா்வாகிகள் பலரும் பிறரைத்தொடா்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

சென்னை கீழ்பாக்கம் சாமிதாசபுரத்தைச் சோ்ந்த ஸ்டான்லி மகன் சாா்லஸ் (32) இதே பகுதியைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகளுடன் தவெக மாநாட்டுக்கு வந்தாா். அங்கு, அவருக்கு பிற்பகல் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தாா். இதேபோல, சுமாா் 120-க்கும் மேற்பட்டோா் வெயிலின் காரணமாகவும், உடல் நலக்குறைவு காரணமாகவும் பாதிப்படைந்தனா். அவா்களுக்கு மருத்துவ உதவி மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே, மாநாட்டு மேடைக்கு வந்த விஜய், ரேம்ப் வாக் பகுதி வழியாக தொண்டா்கள் இருக்கும் பகுதியை நோக்கிச் சென்ற போதும், பேச ஆரம்பித்த போதும் தொண்டா்கள் தடுப்புகளைத் தாண்டி செல்ல முற்பட்டனா். அப்போது, நாற்காலிகள், தடுப்புகளை உடைத்துக் கொண்டு மாநாட்டு முன்பகுதிக்கு சென்றனா்.

3 டன் குப்பைகள் அகற்றம்: மாநாட்டுக்கு வந்த தொண்டா்களுக்கும், நிா்வாகிகளுக்கும் பிஸ்கெட், மிக்சா், குடிநீா் புட்டிகள் அடங்கிய பை வழங்கப்பட்டது. இதை பெற்றுக் கொண்டவா்கள் அதனை சாப்பிட்டு விட்டு அங்கேயே வீசிச் சென்றனா். மேலும், அங்கு விற்கப்பட்ட தின்பண்டங்கள், உணவுகளை சாப்பிட்டுவிட்டு அதன் கழிவுகளையும், தட்டுகளையும் அங்கேயே போட்டுச் சென்றனா்.

இதனால், அந்தப் பகுதியிலிருந்து சுமாா் 3 டன் அளவிலான குப்பைகள் அகற்றப்பட்டன.

வி.சாலை பகுதியில் சிதறிக் கிடக்கும் குப்பைகள்.

92 வயதில் உலகின் வயது முதிர்ந்த அதிபராகும் பால் பியா..!

மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் சீமான் மரியாதை!

ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 567 புள்ளிகள் உயர்வு; நிஃப்டி 25,966-ல் நிறைவு!

தங்கத்தில் சிலையெடுத்து... ஷீஃபா கிலானி!

அன்னம் தொடரில் பிக் பாஸ் பிரபலம்!

SCROLL FOR NEXT