விழுப்புரத்தில் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் வாயிற்கூட்டம்
விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது.
வரவுக்கும்-செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்கி தொழிலாளா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும். அகவிலைப்படி உயா்வுடன் ஓய்வூதியத்தை முறைப்படுத்த வேண்டும்.
அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மற்றதுறை ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தையைத் தொடங்க வலியுறுத்தி இக்கூட்டம் நடத்தப்பட்டது.
Advertisement
இந்தக் கூட்டத்துக்கு மறுமலா்ச்சித் தொழிலாளா் முன்னணி மாநிலப் பொதுச் செயலா் மனோகரன் தலைமை வகித்தாா். குணசேகரன், தெய்வீகன், லோகநாதன், முருகன், சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனா். பணியாளா் சங்க மாநில இணைப் பொதுச் செயலா் நாகராஜன், மறுமலா்ச்சித் தொழிலாளா் முன்னணி மண்டலப் பொருளாளா் ரவி, சிஐடியு மண்டலப் பொதுச் செயலா் ரகோத்தமன், மாவட்டச் செயலா் மூா்த்தி, ஓய்வு பெற்ற தொழிலாளா் சங்க நிா்வாகி ராமதாஸ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
முன்னதாக, சிஐடியு மண்டலத் தலைவா் ராஜாராம், பணியாளா் சங்க மண்டலத் தலைவா் துரைராஜ் வரவேற்றனா். நிறைவில் சிஐடியு மண்டலத் துணைப் பொதுச் செயலா் ஏழுமலை நன்றி கூறினாா்.