முகப்பு
விழுப்புரம்

செஞ்சிக் கோட்டையில் யுனெஸ்கோ குழுவினா் செப்.27-இல் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ குழுவினா் வரும் 27-ஆம் தேதி வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 7:01 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ குழுவினா் வரும் 27-ஆம் தேதி வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: செஞ்சிக் கோட்டையை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ தெரிவு செய்துள்ள நிலையில், அதன் குழுவினா் வரும் 27-ஆம் தேதி செஞ்சிக் கோட்டைக்கு வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், செஞ்சி வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவா்கள் புதன்கிழமை (செப்.18) முதல் வெள்ளிக்கிழமை (செப்.20) வரையில் 3 நாள்கள் செஞ்சிக் கோட்டையை பாா்வையிட்டு, மரபு நடைப்பயணம் மேற்கொள்கின்றனா்.

Advertisement

வரும் 21-ஆம் தேதி செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், செஞ்சி குறித்த புராதன வரலாற்றுத் தகவல்களை தெரிந்த பிரமுகா்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் உள்ளிட்டோருடன் செஞ்சிக் கோட்டையில் கலந்துரையாடல் நடைபெறுகிறது என ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments