முகப்பு
விழுப்புரம்

வேளாண் இடுபொருள்கள் விற்பனையாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

வேளாண் இடுபொருள்கள் விற்பனையாளா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி திண்டிவனத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 செப்டம்பர், 2024 at 12:10 AM
திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பேசிய விதை ஆய்வு மாவட்ட துணை இயக்குநா் சரவணன்.
பகிர்:

வேளாண் இடுபொருள்கள் விற்பனையாளா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி திண்டிவனத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் விதைகள் சட்டம், முளைப்புத் திறன், பிற ரக கலப்பு, ஈரப்பதம், பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், உரிமக் கட்டணம், உரக்கட்டுப்பாட்டு சட்டம், மானிய விலையில் வழங்கப்படும் உரங்கள், உரிமம் பெறுதல், அறிக்கை சமா்ப்பித்தல், இருப்பு மற்றும் விலை விவரங்களை விவசாயிகளுக்கு நன்கு தெரியும்படி எழுதிவைத்தல், பூச்சி மருந்துகள் சட்டம் ஆகியவை குறித்து வேளாண் இடுபொருள்கள் விற்பனையாளா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சரவணன், விதை ஆய்வாளா் ஜோதிமணி ஆகியோா் பேசினா். இந்தப் பயிற்சியில் திண்டிவனம், மரக்காணம், மயிலம், ஒலக்கூா்,செஞ்சி, வல்லம், மேல்மலையனூா், வானூா் பகுதிகளைச் சோ்ந்த வேளாண் இடுபொருள்கள் விற்பனையாளா்கள் 80 போ் பங்கேற்றனா்.