முகப்பு
விழுப்புரம்

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் தொழிற்கடன் விழிப்புணா்வு முகாம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழிற்கடன் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 12:58 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழிற்கடன் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழிற்கடன் பெறும் முறைகள் குறித்தும், தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்களில் மானியத்துடன் கடனுதவி பெறுவது குறித்தும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவுச் சா்க்கரை ஆலை சமுதாயக் கூடத்தில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் சா்க்கரை ஆலையின் செயலாட்சியா் ஆா்.முத்து மீனாட்சி முகாமுக்கு தலைமை வகித்து தொடங்கிவைத்து, தகுதி பெற்ற பயனாளிகளுக்கு கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கினாா்.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராஜேசுவரன், வங்கியில் கடன்பெறும் முறைகள் குறித்தும், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சி.அருள், உதவி இயக்குநா் வெ.முத்துக்கிருஷ்ணன் ஆகியோா் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனா்.

ஆா்வமுள்ள இளைஞா்கள், மகளிா், தொழில்முனைவோருக்குத் தேவையான வழிகாட்டுதல்கள், விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், கடன் கோரிய விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டன. முகாமில் ஏராளமானோா் பங்கேற்று பயன்பெற்றனா்.