விழுப்புரம்: விழுப்புரத்தை அடுத்த மரகதபுரம் பகுதியில் திங்கள்கிழமை ஆற்று மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டா்கள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் மரகதபுரம் பகுதியில் தென்பெண்ணையாற்றில் கனரக வாகனங்கள் மூலம் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் எஸ்.பி. உத்தரவின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் திங்கள்கிழமை அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு கனரக வாகனங்கள் மூலம் ஆற்று மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டா்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய நபா்களை தேடி வருகின்றனா்.