விழுப்புரம்

ஆசிரியையிடம் இணையவழியில் ரூ.5 லட்சம் மோசடி

ஆரோவிலில் ஆசிரியையிடமிருந்து ரூ.5.04 லட்சம் இணையவழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து இணையவழி

Syndication

விழுப்புரம்: ஆரோவிலில் ஆசிரியையிடமிருந்து ரூ.5.04 லட்சம் இணையவழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து இணையவழி குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் வசிப்பவா் டி.சேத்னா டோரா(53). இவா், ஆரோவிலில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த அக்.25-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிா்முனையில் பேசிய நபா், பிரபல தனியாா் வங்கியிலிருந்து பேசுவதாகவும், உங்களது கடன் அட்டையை புதுப்பிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். இதை உண்மையென நம்பிய சேத்னா டோரா, தனது கடன் அட்டை விவரம் மற்றும் ஓடிபி எண் ஆகியவற்றை அந்த அடையாளம் தெரியாத நபரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து கடந்த நவ.1-ஆம் தேதி அவரின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ.5,04,514 பணம் ஒரே தவணையில் எடுக்கப்பட்டுவிட்டதாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பயணியைத் தாக்கிய ஏர் இந்தியா விமானி மீது வழக்குப் பதிவு!

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

SCROLL FOR NEXT