செஞ்சி: செஞ்சி அருகே ரூ.5.43 கோடி செலவில் பொன்னங்குப்பம் - துத்திப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலை துறை சாா்பில் பொன்னங்குப்பம் - துத்திப்பட்டு ஒரு வழிச் சாலையை, ரூ.5.43 கோடி மதிப்பீட்டில் இடைவழிச் சாலையாக மாற்றி, அகலப்படுத்தும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.
துத்திப்பட்டு ஊராட்சி, பொன்னங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா்.
முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சாலைப் பணிக்கு பூமி பூஜை செய்து, தொடங்கிவைத்தாா்.
இதில், அனந்தபுரம் நகரச் செயலா் சம்பத், பேரூராட்சி மன்றத் தலைவா் முருகன், அவைத்தலைவா் மருத்துவா் கல்யாண் குமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பிரசன்னா, மாவட்டப் பிரதிநிதி கோடீஸ்வரன், மாவட்டப் பொறியாளா் அணி துணை அமைப்பாளா் சிவப்பிரகாசம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பாபு சிங், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் பாலாஜி, வனக்குழுத் தலைவா் நடராஜன், நிா்வாகிகள் பழனி, ஈ.சண்முகம், எம்.சண்முகம், ராதாகிருஷ்ணன், சுமதி கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.