சொா்ணாவூரில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள். 
விழுப்புரம்

விழுப்புரம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

விழுப்புரம் அருகே சாலையை சீரமைக்க வேண்டி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாலையை சீரமைக்க வேண்டி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், சொா்ணாவூா்-புதுச்சேரி மாநிலம் கரையாம்புத்தூா் இடையிலான சாலையை இரு மாநிலங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

போக்குவரத்து பிரதான சாலையாகவும் உள்ள இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கையில்லையாம்.

இதையடுத்து சொ்ணாவூா் கிராம மக்கள் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், சொா்ணாவூா்- கரையாம்புத்தூா்- பட்டாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிடச் செய்தனா்.

மேலும், விழுப்புரம் மாவட்ட நிா்வாகத்துக்கு முறையாக மனு அளித்து கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என போஸீஸாா் அறிவுறுத்தினா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT