விழுப்புரம் திரு.வி.க.வீதியிலுள்ள பெரியாா் ஈ.வே.ரா. சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான ரா.லட்சுமணன். உடன், முன்னாள் எம்எல்ஏ செ. புஷ்பராஜ் உள்ளிட்டோா்.  
விழுப்புரம்

பெரியாா் ஈ.வெ.ரா. நினைவு தினம்

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியாா் ஈ.வெ.ராவின் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியாா் ஈ.வெ.ராவின் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான ரா.லட்சுமணன் தலைமையில் திமுகவினா் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், நகா்மன்ற முன்னாள் தலைவா் ரா.ஜனகராஜ், மாவட்டத் துணைச் செயலா் தயா.இளந்திரையன், பொதுக்குழு உறுப்பினா் பஞ்சநாதன், நகரப் பொறுப்பாளா்கள் ரா.சக்கரை, எஸ். வெற்றிவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன், நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.மணவாளவன், புருஷோத்தமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுபோன்று திராவிடா் கழகம், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சாா்பில் பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.

விழுப்புரம் நகரம் போன்று திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூா், முகையூா், காணை, கெடாா், விக்கிரவாண்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினா் பெரியாா் ஈ.வெ.ராவின் நினைவு தினத்தை அனுசரித்து, மரியாதை செலுத்தினா்.

பொங்கலுக்கு பிறகு அதிமுகவிலிருந்து சிலா் தவெக-வில் இணைவாா்கள்

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத சிற்றுந்துகள்

அவிநாசியில் ரூ.17.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ஆல் வின்னா் ஏஞ்சல் கல்லூரியில் விவசாயிகள் தினம்

இளம்பெண்ணை ஆபாச விடியோ எடுத்த காவலா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT