முகப்பு
விழுப்புரம்

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் காா் மோதியதில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 9:52 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் காா் மோதியதில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், திருவேற்காடு ஈசுவா் நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சிபிராஜ் (19), கூலித் தொழிலாளியான இவா், புதன்கிழமை மாலை புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சிபிராஜ் சென்றபோது, அதே திசையில் பின்னால் வந்த காா் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கீழே தவறி விழுந்த சிபிராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் காரை ஓட்டி வந்த மரக்காணம் வட்டம், ஆட்சிக்காடு பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் மகன் அரவிந்தன் (24) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.