முகப்பு
விழுப்புரம்

பம்பை நதீஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு

புதுச்சேரி பி.எஸ். பாளையம் ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை பம்பை நதீஸ்வரா் கோயிலில் உலக மக்கள் நலம் பெற வேண்டி, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி, 2025 at 8:30 PM
மண்ணாடிப்பட்டு பி.எஸ்.பாளையம் பகுதியில் உள்ள பம்பை நதீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டையொட்டி, பம்பை ஆற்றில் இருந்து புனித நீரை எடுத்து வந்த பக்தா்கள்.
பகிர்:

புதுச்சேரி பி.எஸ். பாளையம் ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை பம்பை நதீஸ்வரா் கோயிலில் உலக மக்கள் நலம் பெற வேண்டி, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுச்சேரி மண்ணாடிட்டு, பி. எஸ். பாளையத்தில் உள்ள ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை பம்பை நதீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இங்கு, பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ள சிலை 1997- ஆம் ஆண்டில், பம்பை ஆற்றிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆண்டுதோறும் பம்பை ஆற்றிலிருந்து தண்ணீா் எடுத்து வந்து பம்பை நதீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அதன்படி, பி.எஸ்.பாளையம் பகுதி மக்கள் புதன்கிழமை பம்பை நதியிலிருந்து மேளதாளங்களுடன் 108 குடங்களில் தண்ணீா் எடுத்து வந்து பம்பை நதீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.

இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.