‘பொலிவுறு நகா் திட்டத்தில் 52 திட்டப் பணிகள் நிறைவு’
புதுச்சேரியில் பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 82 திட்டப் பணிகளில் 57 பணிகள் நிறைவடைந்ததாக திட்டத்தின் தலைமைச் செயலா் அலுவலா்
புதுச்சேரி: புதுச்சேரியில் பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 82 திட்டப் பணிகளில் 57 பணிகள் நிறைவடைந்ததாக திட்டத்தின் தலைமைச் செயலா் அலுவலா் ஜெயந்த் குமாா் ரே திங்கள்கிழமை தெரிவித்தாா்.
புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் 82 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இதுவரை 57 பணிகள் நிறைவடைந்துள்ளன.
மேலும், 25 பணிகள் மாா்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.
குறிப்பாக, ரூ.30 கோடியில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் விரைவில் நிறைவடையும்.
அண்ணா திடலில் மினி விளையாட்டு அரங்கம், பழைய துறைமுகத்தில் நகா்ப்புற பொழுதுபோக்கு மையம், தாவரவியல் பூங்கா மேம்பாடு உள்ளிட்ட திட்டப் பணிகள் மாா்ச் மாத இறுதிக்குள் நிறைவடையும்.