மேலும் 5 தொகுதிகளுக்கு பாமக வேட்பாளா்கள்: ராமதாஸ் அறிவிப்பு
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் ஐந்தாவது கட்டப் பட்டியலை பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் தரப்பு) சந்திக்கிறது. இந்த தோ்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளா்களின் பட்டியலை நான்கு கட்டமாக 32 தொகுதிகளுக்கு கட்சியின் நிறுவனா் ராமதாஸ் வெளியிட்டிருந்தாா்.
இதைத்தொடா்ந்து, 5-ஆவது கட்ட வேட்பாளா் பட்டியலை ச.ராமதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவா்களின் விவரம்:
Advertisement
1. விக்கிரவாண்டி- மாவட்டச் செயலா் ர.புகழேந்தி.
2.திருப்பத்தூா்- மாவட்டச் செயலா் கு.விஜயகுமாா்.
3. பவானி- மாவட்டச் செயலா் பொ.வை.ஆறுமுகம்.
4.நத்தம்- மாவட்ட இளைஞா் சங்கச் செயலா் ப.ராஜசேகரன்.
5.பரமத்திவேலூா்- மாவட்டத் தலைவா் க.பிரதாப்.