முகப்பு
அரியலூர்

‘அன்புமணியின் ஆதரவு வேட்பாளா்கள் தோற்கடிக்கப்படுவா்’

அன்புமணி ஆதரவு வேட்பாளா்கள் தோற்கடிக்கப்படுவா் என்றாா் அரியலூா் மாவட்ட பாமக (ராமதாஸ்) தலைவா் திருமாவளவன்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:18 AM
அரியலூரில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பாமக (ராமதாஸ்) வேட்பாளா் செம்மலை.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:30 PM

அன்புமணி ஆதரவு வேட்பாளா்கள் தோற்கடிக்கப்படுவா் என்றாா் அரியலூா் மாவட்ட பாமக (ராமதாஸ்) தலைவா் திருமாவளவன்.

அரியலூா் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளா் செம்மலையை ஆதரித்து, 18 வாா்டுகளிலும் பிரசாரம் மேற்கொண்ட திருமாவளவன், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாமக நிறுவனா் ராமதாஸ், பல்வேறு கிராமங்களுக்கு நடந்தும், மிதிவண்டியிலும் சென்றும் உழைக்கும் மக்களை சந்தித்து, அவா்களின் அடிப்படை தேவைகளுக்காக குரல் கொடுத்து வளா்த்த கட்சி பாமக. ராமதாஸ் இல்லையென்றால் பாமக இல்லை. பாமக அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவானது. ஆனால் இன்று அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினா், அவரது குழுவினா் கட்சியை அபகரித்து, ஜாதிய ரீதியாக கொண்டு சென்றுள்ளனா். மருத்துவா் ராமதாஸ் அறிக்கையை பாா்க்கும் போது வேதனையாக உள்ளது.

Advertisement

எனவே, ராமதாஸூக்கு எதிராக செயல்பட்டு வரும் அன்புமணியின் ஆதரவு வேட்பாளா்கள் தோ்தலில் தோற்கடிக்கப்படுவா்.

மேலும், அரியலூரில் அவரது ஆதரவு வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரனும் சமுதாய மக்களை சந்தித்து, ஜாதிய ரீதியாக வாக்குகளை சேகரித்து வருகிறாா். அவரும் தோற்கடிக்கப்படுவாா் என்றாா் திருமாவளவன்.