முகப்பு
விழுப்புரம்

பாமக வேட்பாளா்கள் விரைவில் அறிவிப்பு: ராமதாஸ்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாமக (ராமதாஸ் ) வேட்பாளா்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

Updated On : 26 மார்ச், 2026 at 10:28 PM
ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாமக (ராமதாஸ் ) வேட்பாளா்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்ட பின்னா், ராமதாஸ் அளித்த பேட்டி:

பாட்டாளி மக்கள் கட்சியும், அனைத்திந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்து பேரவைத் தோ்தலை சந்திக்கும் நிலையில், இந்த கூட்டணிக்கு வேறு கட்சிகள் வரலாம். வராமலும் இருக்கலாம். இந்த சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடக்கூடிய பாமக வேட்பாளா்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.

கூட்டணியின் தலைவியும், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலருமான சசிகலாவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அவா்களுக்கு எத்தனைத் தொகுதிகள், எங்களுக்கு எத்தனைத் தொகுதிகள் என்பது முடிவுக்கு வரும் என்றாா்.