காவல் துறை தணிக்கையில் ரூ.2.38 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறையின் வாகனத் தணிக்கைகளில் வெள்ளிக்கிழமை வரை ரூ.2.38 கோடி ரொக்கம், மதுபானங்கள், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறையின் வாகனத் தணிக்கைகளில் வெள்ளிக்கிழமை வரை ரூ.2.38 கோடி ரொக்கம், மதுபானங்கள், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட மாா்ச் 15-ஆம் தேதி முதல் 7 தொகுதிகளிலும் காவல் துறை மூலம் நடத்தப்பட்ட வாகனத் தணிக்கைகளில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,38,86,434 ரொக்கம், மதுபானங்கள், போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பறக்கும்படை, நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் உள்ளிட்டவற்றுக்கு உரிய ஆவணங்களை சமா்ப்பித்த வகையில், வெள்ளிக்கிழமை வரை ரூ.61,15,280 உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement