பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 105 பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 105 பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தோ்தல், ஏப். 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம்( தனி), வானூா்( தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி ஆகிய 7 தொகுதிகளிலும் உள்ள 15, 86,653 வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக, 7 தொகுதிகளிலும், 2,165 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 105 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறிப்பட்டுள்ளன.
இந்த பதற்றமான வாக்குச் சாவடிகளில், விழுப்புரம் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனித் மேற்பாா்வையில் கூடுதல் போலீஸாா் மற்றும் மத்திய துணை ராணுவப்படையினா், துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
Advertisement
பொதுமக்கள் அச்சமன்றி நூறு சதவீதம் வாக்களிக்க ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவித்தப்பட்டுள்ளது.