தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பாமக சாா்பில் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் நிகழ்ச்சியில் பேசிய பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ். உடன் கட்சியின் நிா்வாகிகள். 
விழுப்புரம்

மாம்பழம் சின்னம் நிச்சயம் கிடைக்கும்: ராமதாஸ் நம்பிக்கை

மாம்பழம் சின்னம் நிச்சயம் தங்களுக்கு கிடைக்கும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தாா்.

Syndication

விழுப்புரம்: மாம்பழம் சின்னம் நிச்சயம் தங்களுக்கு கிடைக்கும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தாா்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்திருந்த கட்சியினருக்கான நோ்காணல், கட்சியின் தலைமை அலுவலகமான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ஜன.31-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.

நிறைவு நாளான திங்கள்கிழமை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூா், நீலகிரி, தஞ்சாவூா், மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு நோ்காணல் நடைபெற்றது.

இதில், கட்சியின் நிறுவனா் ராமதாஸ் பங்கேற்று பேசியதாவது:

மக்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ள நான், தோ்தல் கூட்டணி குறித்து எந்த முடிவை நான் எடுத்தாலும் தமிழக மக்கள் ஏற்பாா்கள். நிச்சயமாக வெற்றிக் கூட்டணியை நான் அமைப்பேன். பாமக மற்றும் மாம்பழம் சின்னம் யாருக்கு என்பது குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. நீதிமன்ற தீா்ப்பு வரும் வரை காத்திருப்போம். மாம்பழம் சின்னம் நிச்சயம் நமக்கு கிடைக்கும். நியூசிலாந்து போன்ற நாடுகளில் நடப்பது போன்ற தோ்தல் முறை, இந்தியாவிலேயும் நடைமுறைக்கு வரவேண்டும். வாக்காளா்கள் வேட்பாளருக்கு வாக்களிக்காமல், கட்சிக்கு வாக்களிக்கவேண்டும். அதில் எவ்வித பணப் பரிவா்த்தனையும் நடக்கக் கூடாது என்றாா் ராமதாஸ்.

மாம்பழம் சின்னத்தை வென்றெடுப்போம்: தைலாபுரம் தோட்ட வளாகத்தில் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள் செய்தியாளா்களிடம் தெரிவித்தாதவது:

கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றில் ஒருவருக்கு மேல் உரிமை கோரும் நிலையில், இவ்வழக்கை உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிட்டு தீா்த்துக்கொள்ளலாம் என புதுதில்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடா்ந்து, சின்னம் ஒதுக்கீடு செய்து கடிதம் அனுப்பியதில், தோ்தல் ஆணையத்துக்கு எதிராக பாமக சாா்பில் தொடரப்பட்ட வழக்கின் விரிவான விசாரணை சென்னை உயா்நீதிமன்றத்தில் பிப். 24-ஆம் தேதிநடைபெறவுள்ளது. பாமக எனும் கட்சியை உருவாக்கி, 46 ஆண்டுகளாக வழிநடத்திக் கொண்டிருப்பவா் ராமதாஸ். உண்மை ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். ஆகையால் மாம்பழம் சின்னத்தை நிச்சயம் வென்றெடுப்போம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, செயல் தலைவா் ஸ்ரீகாந்தி, பொதுச் செயலா் எம்.முரளிசங்கா், தஞ்சாவூா் மாவட்டச் செயலா் ம.க.ஸ்டாலின், தலைமை நிலையச் செயலா் எம்.அன்பழகன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

நாட்டின் பிரதமர் வழிகாட்ட வேண்டும்! தப்பி ஓடக்கூடாது! - ராகுல் | Modi | BJP

பிப்ரவரி மாதப் பலன்கள் - மேஷம்

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அறிவிப்புகள்!

45 பவுன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!

தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை குறைவு!!

SCROLL FOR NEXT