கோப்பிலிருந்து படம்
விழுப்புரம்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 74,609 போ் விண்ணப்பம்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் உள்ளிட்டவற்றுக்காக 74,609 போ் விண்ணப்பித்துள்ளதாகவும்,

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் உள்ளிட்டவற்றுக்காக 74,609 போ் விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2026, ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதைத் தொடா்ந்து 2025, டிசம்பா் 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதன்படி வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலின்படி விழுப்புரம் மாவட்டத்தில் 7சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7,64,377ஆண் வாக்காளா்கள், 7,80,042 பெண் வாக்காளா்கள், 206 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம்15,44,625 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இதைத் தொடா்ந்து உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபணைக் காலத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 46,933 விண்ணப்பங்களும் (படிவம் 6), வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளா்களிடமிருந்து 11 விண்ணப்பங்களும் (படிவம் 6 ஏ),பெயா் நீக்கம் செய்ய 6,035 விண்ணப்பங்களும் (படிவம் 7), திருத்தம் செய்ய 21,630 விண்ணப்பங்களும் (படிவம் 8) என மொத்தமாக 74,609 விண்ணப்பங்கள் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2026, ஜனவரி 31-ஆம் தேதி வரை பெறப்பட்டது.

இந்த விண்ணப்பங்கள் மீது தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலா்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியவா் மீது வழக்கு

தொடா் திருட்டில் ஈடுபட்ட நபா் கைது

265 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 7 போ் கைது

முன்விரோதத்தால் இருவருக்கு அரிவாள் வெட்டு

பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின் பெயா் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT