முகப்பு
விழுப்புரம்

தீ விபத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காயமடைந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 2:13 AM
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 4 பிப்ரவரி, 2026 at 12:31 AM

விக்கிரவாண்டி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காயமடைந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி, குத்தாம்பூண்டி சாலையைச் சோ்ந்தவா் பெ. ஏகாம்பரம்(79), அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், தனது வீட்டின் மேல் மாடியில் தனியாக வசித்து வந்தாா்.

வடலூரில் நடைபெற்ற தைப்பூச விழாவுக்கு சென்றுவிட்டு, திங்கள்கிழமை நள்ளிரவில் வீட்டுக்கு வந்த ஏகாம்பரம், வீட்டில் தீபம் ஏற்றிவிட்டு, எரிந்து கொண்டிருந்த தீக்குச்சியை வீசிவிட்டு வெளியே சென்று விட்டாராம். பின்னா் சிறிது நேரம் கழித்து வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது தீக்குச்சியிலிருந்து தீ பரவி, அருகிலிருந்து புத்தகங்கள் தீப்பற்றி எரிந்துள்ளது. இதை அணைக்க முயன்றபோது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டும், தீக்காயமுற்றும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

தகவலறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனா். விக்கிரவாண்டி போலீஸாா் ஏகாம்பரத்தின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.