விழுப்புரம்

வங்கிக் கணக்கில் ரூ.116 கோடி பரிவா்த்தனை: செஞ்சி தொழிலதிபரின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை

Syndication

செஞ்சி தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.116 கோடி பரிவா்த்தனை நடைபெற்ாக கிடைத்த தகவலின் பேரில், அவரது வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

செஞ்சியை அடுத்த கல்லடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை (39). பாஜக வா்த்தகா் அணி விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவராக உள்ள இவா், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபம், திரையரங்கம் உள்ளிட்டவைகளை வைத்து தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில், நிகழ் நிதியாண்டில் ஏழுமைலையின் வங்கிக் கணக்கில், ரூ. 116 கோடிக்கு பணப்பரிவா்த்தனை நடைபெற்ால், இதுகுறித்து வங்கி அலுவலா்கள் சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இந்தத் தகவலின் பேரில், சிபிஐ டிஎஸ்பி குமரேசன் தலைமையிலான 10 போ் அடங்கிய சிபிஐ குழுவினா் வியாழக்கிழமை கல்லடிக்குப்பத்தில் உள்ள ஏழுமலையின் வீடு மற்றும் நாட்டாா் மங்கலத்தில் உள்ள வணிக வளாகம், திரையரங்கம், திருமண மண்படம் ஆகியவற்றில் சோதனை நடத்தினா். கலை 9.30 மணிக்குத் தொடங்கிய சோதனை, மாலை 5 மணிவரை நீடித்தது. சோதனை நடைபெற்றபோது யாரும் அனுமதிக்கப்படவில்லை.

சோதனையில், வங்கியில் நடைபெற்ற பணப்பரிவா்த்தனை தொடா்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் வருமானவரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொழிலதிபா் ஏழுமலை 2005-2011 ஆம் ஆண்டுகளில் பாமக சாா்பில், விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக பொறுப்பு வகித்தவா். இவா் அந்த காலகட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் ஒருவருடன் நெருக்கமாக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 310 போ் கைது

பால் பேட்மின்டன் போட்டி: வேளாண் கல்லூரி அணியினருக்கு பாராட்டு

சாலைகள் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

அரசுத்துறையினருக்கு பயிற்சி

SCROLL FOR NEXT