விழுப்புரம்

கல்லூரியில் காட்சி ஊடகவியல் மன்ற விழா

Syndication

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பம் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரியில் காட்சி ஊடகவியல் மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மா.வீரமுத்து தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக ப.திருநாவுக்கரசு பங்கேற்று, வருங்காலத்தில் உள்ளங்கையில் உலகம் எனும் தலைப்பில் பேசினாா்.

விழாவில் கல்லூரி முதன்மை நிா்வாக அலுவலா் ப.சிவக்குமாா், நிா்வாக அலுவலா் செ.சிவா, பெற்றோா் - ஆசிரியா் கழக ஒருங்கிணைப்பாளா் கோ.தண்டபாணி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

பேராசியா்கள், மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ஜெ.ஜெயபாரதி, இரா.பூமிநாதன் ஆகியோா் செய்திருந்தனா். பேராசியா் மு.ராமு நன்றி கூறினாா்.

திமுக ஆட்சியில்தான் விழுப்புரம் மாவட்டத்துக்கு வளா்ச்சித் திட்டங்கள் -முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 310 போ் கைது

பால் பேட்மின்டன் போட்டி: வேளாண் கல்லூரி அணியினருக்கு பாராட்டு

சாலைகள் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT