முகப்பு
விழுப்புரம்

மனைவியின் நடத்தையில் மாற்றம் மனமுடைந்த தொழிலாளி தற்கொலை

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 12:59 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 7:51 PM

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் மனமுடைந்த கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டாா்.

செஞ்சி வட்டம், மரூா் டேங்க் தெருவைச் சோ்ந்தவா் கெ.ராஜா (41), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுபாஷினி (34). சுபாஷினிக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த பால்ராஜ்குமாருக்கும் (33) இடையே தகாத உறவு இருந்துவந்ததாம்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 12:59 AM

இந்த நிலையில் பிப்ரவரி 1-ஆம் தேதி இவா்கள் இருவரும் சோ்ந்திருந்ததைக் கண்ட ராஜா, அவா்களைக் கண்டித்தும், கேட்கவில்லையாம். இதனால் மனமுடைந்த ராஜா வியாழக்கிழமை இரவு தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

Advertisement

உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்த போது, ராஜா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பெரியதச்சூா் காவல் நிலையத்தில் ராஜாவின் சகோதரா் அா்ச்சுனன் (46) அளித்த புகாரின்பேரில் பால்ராஜ்குமாா், சுபாஷினி மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, பால்ராஜ்குமாரை வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.