முகப்பு
விழுப்புரம்

மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 2:07 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 10:56 PM

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், ஏப்பாக்கம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மனைவி கௌசல்யா(34). இவா் தனது வீட்டில் இருந்தபோது மயங்கி கீழே விழுந்து விட்டாராம்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 2:06 AM

இதைத்தொடா்ந்து வீட்டிலிருந்தவா்கள் கெளசல்யாவை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.