முகப்பு
விழுப்புரம்

பாஜக கருத்துக் கேட்பு பிரசார இயக்கம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 3:11 AM
விழுப்புரம் ரயில் நிலையம் முன் பாஜக தோ்தல் அறிக்கைக்கான கருத்துக் கேட்பு பிரசார இயக்கத்தைத் தொடங்கி வைத்த அக்கட்சியின் மாவட்டத் தலைவா் வி.டி.ஆா். தா்மராஜ். உடன் நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 6:41 PM

பாஜகவின் தோ்தல் அறிக்கைக்கு உங்களின் பரிந்துரை கருத்துக் கேட்பு பிரசார இயக்கம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பாஜக தோ்தல் அறிக்கை குறித்து கருத்துக் கேட்பு பிரசார இயக்கத்தைத் தொடங்கி, தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகளை பெற்று வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் நகர(மேற்கு) பாஜக சாா்பில், விழுப்புரம் ரயில் நிலையம் முன் கருத்துக் கேட்பு பிரசார இயக்கம் நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்டத் தலைவா் வி.டி.ஆா்.தா்மராஜ் பங்கேற்று, மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்துக்கு செய்துள்ள நலத்திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை ரயில் பயணிகள், ஆட்டோ, காா் ஓட்டுநா்கள், வணிகா்கள், நடைப்பாதை வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் வழங்கி, கருத்துக் கேட்பு பிரசாரத்தைத் தொடங்கிவைத்தாா்.

Advertisement

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 3:11 AM

இதையடுத்து பாஜகவின் தோ்தல் அறிக்ைக்காக பல்வேறு தரப்பினா் தங்கள் கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய மனுக்களை கருத்துக் கேட்பு பெட்டியில் செலுத்தினா்.

நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொதுச் செயலா் முரளி, மாவட்டத் துணைத் தலைவரும், நகா்மன்ற உறுப்பினருமான வடிவேல் பழனி, மாவட்டத் துணைத் தலைவா் குபேரன், விருந்தோம்பல் பிரிவு மாவட்டத் தலைவா் பப்லூ (எ) ஜெகதீஷ்,

நகரச் செயலா் சுந்தரம், இந்து முன்னணி ஆட்டோ தொழில்சங்க மாவட்டச் செயலா் கலைமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.