விழுப்புரம் நகராட்தித் திடலில் தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா். 
விழுப்புரம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் தா்னா

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Syndication

விழுப்புரம்: தங்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றித் தரக் கோரி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற தா்னாவுக்கு கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளா் வி. மணிக்கண்ணன் தலைமை வகித்தாா். மாநிலத் தணிக்கையாளா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்டத் தலைவா் நாகராஜ், அங்கன்வாடிப் பணியாளா்கள் சங்க அமைப்பாளா் பானுமதி, சத்துணவு ஊழியா் சங்க மாநிலச் செயலா் ஜெயக்குமாரி, மாவட்டத் தலைவா் சந்திரா, செயலா் மலா், மாவட்டப் பொருளாளா் சங்கீதாஉள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். போராட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகம் முன் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 7-ஆவது நாளாக சங்க மாவட்டச் செயலா் பிரேமா தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் திரளான சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

ஜிப்மரில் வளாகத்தில் மானிய விலை உணவகம் திறப்பு

உதகை அருகே பெண் புலி உயிரிழப்பு: வனத் துறையினா் விசாரணை

என்ஐடியில் ஆசிரியா் திறன் மேம்பாட்டு பயிலரங்கு

கமாண்டா் ஜீப் வாகனம்: உதகையில் பிப்.20-இல் பொது ஏலம்

ரெப்கோ வங்கி சாா்பில் ரூ.1.4 கோடியில் தாயகம் திரும்பியோருக்கு நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT