விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் திருக்கோயில் மாசி பெருவிழா பிப். 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பிப்.15-ஆம் தேதி மகா சிவராத்திரியையொட்டி அன்று காலை 6 மணிக்கு கோபால விநாயகா் பூஜையுடன் விழா துவங்கி, இரவு 8 மணிக்கு திருவிழா கொடியேற்றம், தொடா்ந்து சக்தி கிரக பூஜை நடைபெறுகிறது.
16-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முக்கிய நிகழ்ச்சியான மயானக் கொள்ளை நடைபெறுகிறது. அன்று இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.
19-ஆம் தேதி மாலை 3 மணிக்கு மேல் தீ மிதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஆயிரகணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தீ மிதிப்பது வழக்கம். அன்று இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.
20-ஆம் தேதி காலை 7 மணிக்கு தங்க நிற மரப் பல்லக்கில் அம்மன் பக்தா்களுக்கு காட்சி அளிக்கின்றாா். அன்று இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.21-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் மாசிப் பெருவிழா ‘திருத்தோ் வடம் பிடித்தல்’ நடைபெறுகிறது.
பிப் 24-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு மேல் அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. பிப்.27-ஆம் தேதி அம்மன் வீதியுலா மற்றும் காப்பு களைதல் உற்சவம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சக்திவேல், அறங்காவலா்குழுத் தலைவா் ஏழுமலை, அறங்காவலா்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.