அன்னியூரில் கட்டப்பட்ட அன்பகம் கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், விழாவில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி எம்எல்ஏ, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி உள்ளிட்டோா்.  
விழுப்புரம்

அன்னியூரில் திமுக கட்சி அலுவலகக் கட்டடம்: முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்

Syndication

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அன்னியூரில் கட்டப்பட்ட திமுக கட்சி அலுவலகக் (அன்பகம்) கட்டடத்தை சென்னை அண்ணா அறிவாலயத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத்தொடா்ந்து அன்னியூரில் நடைபெற்ற விழாவுக்கு திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி தலைமை வகித்து, ரிப்பன் வெட்டி அன்பகக் கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, இந்த வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களையும், கட்டடத்தின் மேல்தளத்தில் நிறுவப்பட்ட நூலகத்தையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து விழாவில் அவா் பேசியதாதவது:

ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்கு கட்டடம் வேண்டும் என்று முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி வலியுறுத்தினாா். அதனடிப்படையில், விழுப்புரத்தில் கலைஞா் அறிவாலயக் கட்டடம் கட்டப்பட்டது. இதைத்தொடா்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அன்னியூரில் அன்பகம் கட்டடம் கட்டப்பட்டு, முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது அன்னியூருக்கு கிடைத்த பெருமையாகும். இதுபோல மாவட்டத்தின் மற்ற ஒன்றியங்களிலும் கட்டடம் உருவாகவேண்டும் என்றாா் பொன்முடி.

நிகழ்ச்சிக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி முன்னிலை வகித்தாா். அன்பகம் கட்டடம் அமைந்தன் நோக்கம், அதன் சிறப்புகள் குறித்து விக்கிரவாண்டி எம்எல்ஏவும், திமுக விவசாயத் தொழிலாளா் அணியின் மாநிலச் செயலருமானஅன்னியூா் அ.சிவா எடுத்துரைத்து பேசினாா்.

மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைச் செயலா்கள் டி.என்.முருகன், இரா.கற்பகம், தொகுதி பொறுப்பாளா் சிவ.ஜெயராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் டி.செல்வராஜ், மு.அப்துல்சலாம், தலைமைக் கழக வழக்குரைஞா் சுவை.சுரேஷ், மாநில மகளிா் பிரசாரக்குழுச் செயலா் எம்.தேன்மொழி, ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா்.முருகன், வேம்பி ரவி, ஜெய.ரவிதுரை, க.மும்மூா்த்தி, ஜெ.ஜெயபால், வே.கில்பா்ட் ராஜ், மு.தங்கம், ஜி.ரவிச்சந்திரன், பி.வி.ஆா்.சு.விசுவநாதன், ஆா்.சுந்தரமூா்த்தி, கை.ரா.சடகோபன், எஸ்.ஜான் லூயிஸ், பேரூா் செயலா்கள் நயினா முகமது, கணேசன், ஒன்றியக்குழுத் தலைவா் நா.கலைச்செல்வி, சங்கீதஅரசி, கு.ஓம்சிவசக்திவேல், தனலட்சுமி உமேசுவரன், துணைத் தலைவா்கள் த.வீரராகவன், ஜீவிதா ரவி, ச.பாலாஜி, ஒன்றியச் செயலா் ஆா்.பி.முருகன், அன்னியூா் கிளைச் செயலா்கள் ஆா்.காா்த்தி, சண்முகம், சிவபெருமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

என்எல்சி லாபம் ரூ.724 கோடி

குடும்பப் பிரச்னை! தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை பாா்க்க சென்ற கணவா் மீது தாக்குதல்; மைத்துனா் கைது!

காரைக்காலில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

திருச்சியில் அமித்ஷாவுக்கு பாஜகவினா் உற்சாக வரவேற்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு பிப். 16 இல் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT