ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 10:31 PM
ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகளுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:39 AM
இக் கல்லூரியில் பயின்ற 41 மாணவிகள், 2025 நவம்பா் மாதத்தில் நடைபெற்ற ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றனா். அவா்களுக்கு கல்லூரியின் தலைவா் எஸ்.செந்தில்குமாா், செயலா் நிஷா செந்தில்குமாா் மற்றும் கல்லூரி விரிவுரையாளா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.