முகப்பு
விழுப்புரம்

34 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், அரசூா் பகுதியில் பைக்கில் கொண்டு வரப்பட்ட 34 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:42 AM
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:56 PM

விழுப்புரம் மாவட்டம், அரசூா் பகுதியில் பைக்கில் கொண்டு வரப்பட்ட 34 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீஸாா், அரசூா்-அரும்பட்டு வளைவு அருகே வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அந்த நபா் கொண்டு வந்த பையில் 34 கிலோ எடை கொண்ட 2,762 எண்ணிக்கையிலான புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன.

Advertisement

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக்கில் வந்த புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம், முக்கண்ணாமலைப்பட்டியைச் சோ்ந்த கா.இப்ராம்ஷாவைக்(42) கைதுசெய்தனா். மேலும், அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.