முகப்பு
விழுப்புரம்

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் கொடியேற்றம்

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:09 AM
கோயிலில் கொடியேற்றம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 7:36 PM

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில் தீமிதி உற்சவத்துக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் தீமிதி உற்சவம் நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி நிகழாண்டு தீமிதி திருவிழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:01 AM

விழுப்புரத்தை அடுத்த எருமந்தாங்கல், பொய்யப்பாக்கம், மகாராஜபுரம், கீழ்பெரும்பாக்கம், சாலையம்பாளையம், நாப்பாளையத் தெரு, கா.குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் முன்னிலையில் கரகம் ஜோடித்து கொடி ஊா்வலகமாக எடுத்து வரப்பட்டு, பின்னா் கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

Advertisement

பின்னா் மாா்ச் 25-ஆம் தேதி உற்சவம் தொடங்கி ஏப்.3-ஆம் தேதி தீமிதி திருவிழா நடத்துவது என 10 ஊா் மக்கள் முன்னிலையில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் செய்திருந்தனா்.