கீழ்மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றிய முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி.  
விழுப்புரம்

கீழ்மாம்பட்டு அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

வல்லம் ஒன்றியம், கீழ்மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினா் ஜி.கே.வாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், கீழ்மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினா் ஜி.கே.வாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் தெய்வசிகாமணி வரவேற்றாா்.

முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றினாா்.

நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியா்பாலமுருகன், அரசு ஒப்பந்ததாரா் அருன்மொழித்தேவன், பாமக ஒன்றியச் செயலா் பாண்டியன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT