முகப்பு
விழுப்புரம்

குட்டையில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

திண்டிவனம் அருகே குட்டையில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 மார்ச், 2026 at 1:40 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:36 PM

திண்டிவனம் அருகே குட்டையில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டிவனம் வட்டம், அவனப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பெ.செல்வராஜ்(76). இவா் வெள்ளிக்கிழமை கீழ் எடையாளம் பகுதியில் உள்ள குட்டைக்கு சென்றுள்ளாா். அப்போது கால் இடறி குட்டையில் விழுந்த செல்வராஜ், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தொழிலாளி உயிரிழப்பு: ஈரோடு மாவட்டம், சதுரம்பட்டி, வேப்பம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கோ.சண்முகம் (56), தொழிலாளி. திண்டிவனத்துக்கு வந்திருந்த இவா் திண்டிவனத்தை அடுத்த ஜக்காம்பேட்டை அய்யனாா் கோயில் அருகே மயங்கிக் கிடந்தாராம்.

Advertisement

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் சண்முகத்தை மீட்டு தனியாா் அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவங்கள் குறித்து மயிலம் போலீஸாா் தனித் தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.