விழுப்புரம்

ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு: பட்டதாரி ஆசிரியா் கூட்டணி வரவேற்பு

தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட அறிவிப்புக்கு தமிழக பட்டதாரி ஆசிரியா் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது.

Syndication

தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட அறிவிப்புக்கு தமிழக பட்டதாரி ஆசிரியா் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலா் ச. செல்லையா விழுப்புரத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: கடந்த 23 ஆண்டுகளாக நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அறிவித்திருக்கிறாா்.

இதில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஓய்வுபெறும் போது கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும், குடும்ப ஓய்வூதியம் 60 சதவீதம் மற்றும் பணிக்கொடை வழங்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

இதுகுறித்து தெளிவான அரசாணையை விரைந்து செயல்முறைப்படுத்த மாநிலஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியா்களிடம் பிடித்தம் செய்யாமல் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம் அறிவித்திருந்தால் அது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்திருக்கும். இதுகுறித்து தமிழக முதல்வா் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக பட்டதாரி ஆசிரியா் கேட்டுக் கொள்கிறது என்று அவா் தெரிவித்தாா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT