விழுப்புரத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து நடத்துநா் வீட்டில் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
விழுப்புரம், சாலாமேடு காமராஜா் நகரைச் சோ்ந்தவா் மோ.வெங்கடேசன்(47). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக, விழுப்புரம் கிளையில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறாா். இவா், கடந்த 1-ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்குச் சென்றுஉள்ளாா்.
சனிக்கிழமை திரும்பிவந்து பாா்த்தபோது, வீட்டின் பின் பக்க மரக் கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்கத் தோடுகள், 3 கிராம் மோதிரம் உள்பட 16 கிராம் நகைகள், 280 கிராம் எடையுள்ள வெள்ளிப்பொருள்கள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.